தமிழ்நாடு

tamil nadu

மீண்டு வந்த ஈவிகேஎஸ்! மருத்துவமனை அறிக்கை கூறியது என்ன?

By

Published : Apr 7, 2023, 7:47 AM IST

நெஞ்சு வலி மற்றும் கரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

EVKS
EVKS

சென்னை : நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலன் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், இருமல் ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, லேசான கரோனா பாதிப்பும் இருப்பது தெரிய வந்தது. பின்னர் சில நாட்களில் கரோனா பாதிப்பிலிருந்து அவர் குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும், விரைவில் வீடு திரும்புவேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஆனாலும், இதய பாதிப்பு காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவமயைில் சிகிச்சை பெற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரது உடல் நிலை சீராக உள்ளதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :வேலூரில் மேம்பாலம்? எம்.எல்.ஏ. ஆதங்கத்தில் பேசுகிறார்! அமைச்சர் எ.வ.வேலு கூறியது யாரை?

ABOUT THE AUTHOR

...view details