தமிழ்நாடு

tamil nadu

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இணையவழி நிகழ்ச்சிகள்

By

Published : Aug 10, 2021, 10:10 PM IST

இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுவிழா, சென்னைவிழா ஆகியவற்றை முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையேயான போட்டி, இந்தியா - 75 இளைஞர் மாநாடு, சென்னை காட் டேலண்ட் போன்ற நிகழ்ச்சிகள் இணையவழியில் நடைபெறுகிறது.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இணையவழி நிகழ்ச்சிகள் அரங்கேற்றம்
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இணையவழி நிகழ்ச்சிகள் அரங்கேற்றம்

சென்னை:இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான, பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்கான இந்தியா - 75 இளைஞர் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இணையவழியில் நடத்தப்பட உள்ளன.

தொடர்ந்து சென்னை தினத்தை கொண்டாடும் வகையில், சென்னை காட் டேலண்ட் போட்டி நிகழ்ச்சியும் இணையவழியில் நடத்தப்படவுள்ளது.

பதிவு செய்வதற்கான கடைசி தேதி வெளியீடு

இதனை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் யங் இந்தியன்ஸ் உடன் இணைந்து நடத்தவுள்ளன.

தற்போது பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், சென்னை காட் டேலண்ட் ஆகியவற்றில் பங்கேற்பதற்கான பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கான பதிவுகள் ஆகஸ்ட் 14ஆம் தேதியும், சென்னை காட் டேலண்டிற்கான பதிவுகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதியும் முடிவடைய உள்ளன. இந்தியா - 75 இளைஞர் மாநாடு போட்டி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

கூடுதல் விவரங்களுக்கான இணைப்புகள்

மேற்கூறிய போட்டிகளில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள், பதிவு செய்ய, கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கான இணைப்புகள் கீழ்வருமாறு:

பள்ளிகளுக்கு இடையிலான போட்டிக்கு - https://viyuva.in/schools/

இந்தியா -75 இளைஞர் மாநாடு போட்டிக்கு - https://youngindians.glueup.com/event/youth-conclave-the-future-41514/

சென்னை காட் டேலண்ட் போட்டிக்கு - https://yivuva.in/cg/ என்ற இணைப்புகளின் மூலம் பங்கேற்கலாம்.

இதையும் படிங்க:பாலிடெக்னிக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details