தமிழ்நாடு

tamil nadu

மழை எதிரொலி: நாளை எங்கெங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

By

Published : Nov 11, 2022, 10:44 PM IST

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 12.11.2022, இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழ்நாட்டில் தொடர் கனமழை தொடர்வதை முன்னிட்டு நாளையும்(12.11.2022) பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இயங்காது என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருவாரூர், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் புதுவை, காரைக்கால் மாவட்டங்களிலும் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுப்பு வழங்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் ராமநாதபுரத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு மாத்திரமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நடு ரோட்டில் பாலியல் தொல்லை,கொடூர தாக்குதல்..! சென்னை பேராசிரியர் கைது..

ABOUT THE AUTHOR

...view details