தமிழ்நாடு

tamil nadu

'பிரியா இறப்பு; நடவடிக்கை எடுக்கலாம் என மருத்துவர்களே பரிந்துரை'

By

Published : Nov 21, 2022, 4:57 PM IST

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மா சுப்பிரமணியன் அளித்த பேட்டி
மா சுப்பிரமணியன் அளித்த பேட்டி

சென்னை: எழும்பூர் கண் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், 'கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் எந்தக்குறையும் இல்லை. சிகிச்சைக்குப் பின்னர் காலில் ரத்தத்தை கட்டுப்படுத்த போடப்பட்டிருந்த கட்டை அகற்றாமல் விட்டுவிட்டனர். சிகிச்சைக்குப் பின்னர் ஏற்பட்ட கவனக்குறைவு உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு, மருத்துவர் சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன. மருத்துவர்கள் மீது கொலைக் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கக் கூடாது. வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என மருத்துவர்களே தெரிவித்துள்ளனர்.

ஆகையால், இந்த வழக்கில் மருத்துவர்கள் யாரும் அரசின் மீது கோபமாக இல்லை. இதுமட்டுமின்றி இந்த வழக்கில், மருத்துவர்களுடன் கலந்து பேசி சிவில் வழக்காக அல்லது கிரிமினல் வழக்காக பதிவதா என்பதை காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு இதுவரை எந்தவித தணிக்கையும் இல்லை. வரும் 23-ம் தேதி, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அறுவை சிகிச்சை குறித்து தணிக்கை செய்வது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்யப்படவுள்ளது.

அதன்படி அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் கடிதம் அனுப்பப்படும்' எனத் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி

முன்னதாக பேசிய அவர், 'தமிழ்நாட்டில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போல், 4,000 மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மருத்துவத் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும் மருத்துவர்களுக்கு எங்கும் பணிச்சுமை கிடையாது. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் தேவைக்கேற்ப பணியிடங்கள் நிரப்பப்படும்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க:பிரியா உயிரிழந்த வழக்கு - மருத்துவர்களை பிடிக்க தனிப்படை

ABOUT THE AUTHOR

...view details