தமிழ்நாடு

tamil nadu

தாம்பரம் மாநகராட்சி 4-வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் கைது.. பின்னணி என்ன?

By

Published : Jun 27, 2023, 7:56 PM IST

தாம்பரம் மாநகராட்சி பகுதிக்கு ஒப்பந்த பணிக்கு வந்த லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் திமுக வார்டு கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

dmk ward councilors husband
திமுக கவுன்சிலர் கணவர்

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி பகுதியில் சாலையில் தேங்கும் கழிவு நீர் பிரச்சனைக்கு பாதாள சாக்கடை ஒன்றே தீர்வு என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு பகுதியான அனகாபுத்தூரில் பக்தவச்சலம் தெருவில் பாதாளா சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் ஒன்றிடம் அரசு வழங்கியுள்ளது.

மேலும், இத்திட்டம் சார்பில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் ரூபாய் 48.90 கோடி செலவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை சென்னை, திருவான்மியூர், காமராஜ் நகர் 4-ஆவது கிழக்கு தெருவை சேர்ந்த கண்ணன் (49) என்பவர் மேலாளராக இருந்து கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு அனகாபுத்தூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படும் இடத்திற்கு லாரியில் கான்கிரீட், மணல், ஜல்லி போன்ற கட்டுமானத்திற்கு தேவையான கலவைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தார். இந்த லாரியானது அனகாபுத்தூர் வழியாக செல்லும் போது தமிழ்குமரன் என்பவர் வழிமறித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: உயர்நீதிமன்றக் கிளை முக்கிய உத்தரவு!

அவர், தாம்பரம் மாநகராட்சி 4-வது வார்டு திமுக கவுன்சிலரான சித்ராவின் கணவர் என்பது விசாரனையில் தெரிய வந்தது. லாரியை இயக்கிய கண்ணனிடம் "எங்கள் ஊரின் வழியாக லாரி செல்வதென்றால் தனக்கு பணம் கொடுத்து விட்டு தான் செல்ல வேண்டும்" என்று பணம் கேட்டு தமிழ்குமரன் மிரட்டியதோடு, கண்ணனை அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது.

ஆனாலும், மேலாளர் கண்ணன் பணம் கொடுக்க மறுத்து விட்டார். மேலும் தமிழ்குமரன் தகாத வார்த்தைகளால் கண்ணனை திட்டியுள்ளார் .இதனால் பயந்து போன கண்ணன் இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே போலீசார் தமிழ்குமரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், இன்று வீட்டில் இருந்த தமிழ்குமரனை கைது செய்தனர். அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.

திமுக நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலரின் கணவர்கள் அரசு விவகாரங்களில் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைமை பல முறை எச்சரிக்கை விடுத்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது திமுகவுக்கு பெரும் தலைவலியை கொடுத்து வருகிறது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:"இஸ்லாமியர்கள் வாழ்வாதாரத்திற்கு எதிர்க்கட்சிகள் என்ன செய்தன..?" பிரதமர் மோடி ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details