தமிழ்நாடு

tamil nadu

முரசொலி பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்து ஆபாச பதிவு.. சென்னை சைபர் கிரைம் விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 7:39 PM IST

Murasoli FB page hack: திமுகவின் முரசொலி நாளிதழ் முகநூல் பக்கத்தை முடக்கி ஆபாச படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி. இந்த நாளிதழின் முகநூல் பக்கம் அக்டோபர் 4 ஆம் தேதி இரவு முடக்கப்பட்டது. மேலும் அதில், அடையாளம் தெரியாத சைபர் கும்பல் ஆபாசப் படங்களை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முரசொலி நிர்வாகத்தினர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து முரசொலி நாளிதழின் பொது மேலாளர் ராஜசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து இன்று (அக்.6) புகார் கொடுத்துள்ளார். அதில், "எங்களது 'முரசொலி நாளிதழ்" தினசரி தமிழ்நாடு முழுவதும் வெளிவருகிறது. 04.10.2023 இரவு 10 மணியளவில் முரசொலி முகநூல் (Facebook)-ஐ Hackers மூலம் முடக்கப்பட்டு விரும்பத்தகாத புகைபடங்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

அத்துடன் 200 டாலர்கள் எனக்கு அனுப்பிவையுங்கள், நான் உங்களுடைய முகநூல் அக்கவுன்ட்-ஐ (Facebook Account) திருப்பி தருகிறேன் என்று குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, இந்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திமுகவினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உதயநிதியை பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு: ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து முன்னணிக்கு நீதிமன்றம் உத்தரவு!!

ABOUT THE AUTHOR

...view details