தமிழ்நாடு

tamil nadu

சென்னை 127ஆவது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

By

Published : Feb 22, 2022, 3:01 PM IST

சென்னை மாநகராட்சியின் 127ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் லோகு ஒன்பதாயிரத்து 822 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் வெற்றி
திமுக வேட்பாளர் வெற்றி

சென்னை மாநகராட்சியின் 127ஆவது வார்டில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் 19 ஆயிரத்து 792 வாக்குகள் பதிவாகின. அந்த வார்டில் திமுக சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர் லோகு ஒன்பதாயிரத்து 822 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகன் இரண்டாயிரத்து 233 வாக்குகளைப் பெற்றார். அதேபோல் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் குமரேசன் இரண்டாயிரத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றார்.

திமுக வேட்பாளர் வெற்றி

திமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வைப்புத்தொகை இழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வேட்பாளர் வெற்றிபெற்றதற்கான சான்றிதழைத் தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.

இதையும் படிங்க: மீண்டும் ஒத்த ஓட்டு பாஜக!

ABOUT THE AUTHOR

...view details