தமிழ்நாடு

tamil nadu

கூடுதலாக பாமாயில் சப்ளை செய்யக்கூறிய தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி!

By

Published : Jun 1, 2022, 8:24 PM IST

கூடுதலாக பாமாயில் சப்ளை செய்யும்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதலாக பாமாயில் சப்ளை செய்ய கூறிய தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி!
கூடுதலாக பாமாயில் சப்ளை செய்ய கூறிய தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி!

சென்னை: தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்குவதற்காக, ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாக்கெட் பாமாயில் சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் கோரியிருந்தது. இதில், ஒரு லிட்டர் 120 ரூபாய் 25 காசுகள் என்ற விலையில் பாமாயில் சப்ளை செய்த நிலையில், மே 3 ஆம் தேதிக்குள் கூடுதல் பாமாயில் சப்ளை செய்யும்படி உணவுப்பொருட்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், சென்னையைச் சேர்ந்த ஸ்டார் ஷைன் லாஜிஸ்டிக்ஸ், ருச்சி சோயா உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று (ஜூன் 1) இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “வழக்கமாக அரசுக்கு பாமாயில் சப்ளை செய்து வரும் மனுதாரர் நிறுவனங்களுக்கு சந்தை நிலவரம் நன்றாக தெரிந்திருக்கும்.

பாமாயில் ஏற்றுமதிக்கு ஏப்ரல் 27ஆம் தேதி தான் இந்தோனேஷியா அரசு தடை விதித்துள்ளது எனும்போது, அதற்கு முன்னதாக மார்ச் 2ஆம் தேதியே கூடுதல் பாமாயில் சப்ளை செய்ய கோரப்பட்டதால், அரசின் உத்தரவில் தலையிட எந்தக் காரணமும் இல்லை. இதற்கிடையில், 2 லட்சம் லிட்டர் பாமாயில் சப்ளை தொடர்பாக கோரப்பட்ட டெண்டர் ஏப்ரல் 21ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி தான் திறக்கப்பட்டது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை விதித்துள்ளது. எனவே, அரசு உரிமையாளராக செயல்பட்டாலும் சரி, வாடகைதாரராக செயல்பட்டாலும் சரி, உண்மையாக செயல்பட வேண்டும். எனவே, இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு, வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கேட்டு நளினி மனுத்தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details