தமிழ்நாடு

tamil nadu

இயக்குநர் விக்ரமன் மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை சர்ச்சை.. மருத்துவ துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 8:12 PM IST

Director Vikraman: தனியார் மருத்துவமனையில் மனைவிக்கு தவறான சிகிச்சையால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விக்ரமன் குற்றம்சாட்டியிருந்த நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இயக்குநர் விக்ரமனின் மனைவிக்கு சிகிச்சை
இயக்குநர் விக்ரமனின் மனைவிக்கு சிகிச்சை

சென்னை:பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமனின் மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக அவர் நடக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே தனது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் இயக்குநர் விக்ரமன் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனையடுத்து இன்று (அக்.30) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி, நரம்பியல் துறைத் தலைவர் எம்.சங்கர், எலும்பியல் துறைத் தலைவர் தொல்காப்பியன் உள்ளிட்டவர்கள் அடங்கிய மருத்துவ குழு, இயக்குநர் விக்ரமனின் மனைவியை நேரில் சென்று பரிசோதித்தனர்.

இது குறித்து, இயக்குநர் விக்ரமன் கூறுகையில், "எனது மனைவி 5 வருடகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரது முதுகில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக நடக்க முடியாமல் போனது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சரிடம் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.

அதனை பார்த்த முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன் பின்னர் 15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் எனது இல்லத்திற்கு வந்து, எனது மனைவியை பரிசோதனை செய்துள்ளார்கள்.

மேலும் என்னுடைய மனைவியின் உடல நிலை சீரமைய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இப்படி உடனடி நடவடிக்கை எடுத்த முதல்லமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் மனமார்ந்த நன்றி" என்று இயக்குநர் விக்ரமன் தெரிவித்தூள்ளார்.

பின்னர் இது குறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி கூறுகையில், "உயர் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில் இயக்குநர் விக்ரமனின் மனைவியின் உடல், நரம்பியல் ரீதியாக (Neurology) 5க்கு 3 என்ற அளவிற்கு சீராக இருப்பது தெரியவந்துள்ளது. இது ஒரு நல்ல நிலை தான், எனவே இவருக்கு பிசியோதெரபி சிகிச்சை மற்றும் உடற் பயிற்சி வழங்குவதன் மூலம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

மேலும், இவருக்கு சக்கரை (Diabetis), உயர் இரத்த அழுத்தம் (Hypertension) ஆகியவை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அவர்கள் வீட்டில் இருந்தபடியே உரிய சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, குணமடையும் வாய்ப்புகள் உள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக அணி!

ABOUT THE AUTHOR

...view details