தமிழ்நாடு

tamil nadu

அரும்பாக்கம் கொள்ளை வழக்கு... குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 1 லட்சம் பரிசு

By

Published : Aug 14, 2022, 11:37 AM IST

Updated : Aug 14, 2022, 12:15 PM IST

அரும்பாக்கம் கொள்ளை வழக்கு தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் பொதுமக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

Arumbakkam robbery case  dgp announced one lakh rupees reward  bank robbery case  arumbakkam bank robbery  tamil nadu dgp  தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு  சைலேந்திர பாபு  அரும்பாக்கம் கொள்ளை வழக்கு  அரும்பாக்கம் கொள்ளை வழக்கு சன்மானம் அறிவிப்பு
சைலேந்திர பாபு

சென்னை: அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தின் கிளையில், நேற்று (ஆக. 13) இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர், காவலாளி மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று அரும்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூடுதல் ஆணையர் அன்பு மற்றும் துணை ஆணையர் விஜயகுமார் நேரில் ஆய்வு நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வங்கியில் வேலை பார்த்த நபர்களே கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது, நிறுவனத்தின் ஊழியர் முருகன் என காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், அரும்பாக்கம் கொள்ளை குறித்து துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

முன்னதாக, காவலர்களுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல் அளிக்கும் பொதுமக்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை நகைக்கடன் நிறுவனத்தில் ரூ.20 கோடி நகைகள் கொள்ளை, 4 தனிப்படைகள் அமைப்பு

Last Updated : Aug 14, 2022, 12:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details