தமிழ்நாடு

tamil nadu

அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

By

Published : Sep 6, 2021, 8:31 AM IST

நாளை (செப்.07) நடைபெற உள்ள பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி கோயில் தேர் திருவிழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னை வேளாங்கண்ணி கோயில்
அன்னை வேளாங்கண்ணி கோயில்

சென்னை: பெசன்ட் நகர், சென்னை பெருநகர மாநகராட்சியின் 13ஆவது மண்டலம், அடையாறு காவல் மாவட்டம், திருவான்மியூர் காவல் நிலைய சரகத்திற்குள் அமைந்துள்ளது அன்னை வேளாங்கண்ணி ஆலயம்.

இந்த ஆலயத்தின் வருடாந்திர திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த மாதம் 8ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த விழாவின் தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது. இதற்காக சில முக்கிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்க காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்களின் பாதுகாப்பு, நலன் கருதி கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தேர் திருவிழாவில் கலந்துகொள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. நாளை(செப்.7) நடைபெற இருக்கும் தேரோட்டத்திற்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

பக்தர்களும், மக்களும் தேரோட்ட நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் சமூகவலைதள நேரடி ஒளிபரப்புகளில் காண அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள் நாளை பெசன்ட் நகர் கடற்கரைக்கு வாகனத்துடன் வர வேண்டாம் என்றும், காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அன்னை வேளாங்கண்ணி கோயில் பெசன்ட் நகர் சுற்றியுள்ள வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை.

பொதுமக்களும் பக்தர்களும் சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் வழிகாட்டல்களைப் பின்பற்றி கரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஒத்துழைப்பு நல்கி, தேரோட்டம் நடைபெறும் நாளன்று தேரோட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ள காவல்துறை சார்பில் கேட்டுகொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க:1.86 கோடியா? 186 கோடியா ? - குழம்பிய அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details