தமிழ்நாடு

tamil nadu

எரிபொருள் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணம்: அரசு பதிலளிக்க ஆணை!

By

Published : Nov 30, 2022, 6:29 PM IST

எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Determine
Determine

சென்னை: சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், "2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யப்படவில்லை. எரிபொருள் விலை ஏற்றத்தால், ஆட்டோ ஓட்டுனர்கள் தாங்களாகவே கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறார்கள்.

எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் எரிபொருள் விலைக்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்கவும், மின்னணு மீட்டர்களில் தானாகவே கட்டணத்தை மாற்றிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் எஸ்.வி.ராமமூர்த்தி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, வழக்கு குறித்து பதிலளிப்பதாக தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு வழக்கில் எஸ்கேப்.. மற்றொரு வழக்கில் சிக்கல்!

ABOUT THE AUTHOR

...view details