தமிழ்நாடு

tamil nadu

துயரத்தில் இருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 50 லட்சம் அளித்த ஓபிஎஸ் - நன்றி சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்...

By

Published : Apr 29, 2022, 2:29 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், இலங்கை மக்களுக்கு நிவாரணமாக தனிப்பட்ட முறையில் 50 லட்சம் தருவதாக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

deputy-leader-of-opposition-o-panneerselvam-announces-rs-50-lakhs-to-help-people-of-sri-lanka-in-assembly துயரத்தில் இருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 50 லட்சம் அளித்த ஓபிஎஸ் - மனதார நன்றி சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்...
deputy-leader-of-opposition-o-panneerselvam-announces-rs-50-lakhs-to-help-people-of-sri-lanka-in-assembly துயரத்தில் இருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 50 லட்சம் அளித்த ஓபிஎஸ் - மனதார நன்றி சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்...

சென்னை:இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்பதே நமது அரசின் நிலைப்பாடு, 80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, 28 கோடி மதிப்பில் மருந்து, 15 கோடியில் பால் பொருட்களை நாம் வழங்க நினைக்கிறோம்.

ஆனால், ஒன்றிய அரசின் அனுமதியோடுதான் இதனை நாம் அனுப்ப முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ், இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் விசிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்

அதன் பின் பேசிய பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், அதேபோல் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்க உள்ளதாக தெரிவித்தார். பின்னர் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம், தனது குடும்ப நிதியிலிருந்து 50 லட்ச ரூபாயை அளிப்பதாகவும் பேரவையில் தெரிவித்தார். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

துயரத்தில் இருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 50 லட்சம் அளித்த ஓபிஎஸ் - மனதார நன்றி சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்...

இதையும் படிங்க: முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்

TAGGED:

tn assembly

ABOUT THE AUTHOR

...view details