தமிழ்நாடு

tamil nadu

வராக நதியை மேம்படுத்த தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்த ஓபிஎஸ்!

By

Published : Sep 9, 2020, 10:14 PM IST

தேனி: பெரியகுளம் வராக நதியை தூய்மைப்படுத்தும் பணியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வற்றாத நதியாக ஓடிக் கொண்டிருந்தது வராக நதி. மருதமரங்கள் காசிக்கு அடுத்தப்படியாக வராக நதிக் கரைகளில் தான் அமைந்துள்ளது. நதியின் தென்கரையில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி உடனுறை, பாலசுப்ரமணியர் என மூன்று சன்னதிக்கும் தனித்தனி கொடி மரம் அமைந்துள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி சோத்துப்பாறை அணை, கல்லாறு உள்ளிட்ட நதிகளுடன் இணைந்து பெரியகுளம் நகர், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட ஊர்களின் வழியாக சுமார் 30 கி.மீ தூரம் பயணித்து வைகை அணையில் கலக்கிறது.

இதன் மூலம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார குடிநீர், நிலத்தடி மற்றும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வராக நதி காலப்போக்கில் கழிவுநீர், இறைச்சி மற்றும் குப்பைகளால் மாசடையத் தொடங்கின. இதைத் தூய்மைப்படுத்தி வராக நதியை வற்றாத நதியாக மாற்ற வேண்டும் என பெரியகுளம் பகுதி தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் முயற்சிகளை முன்னெடுத்தனர்.

இதைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் கோரிக்கை வைத்தனர். அதன் தொடக்கமாக வராக நதியை காப்போம் என்ற ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டு கடந்த சில நாள்களுக்கு தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வராக நதியை மேம்படுத்த தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்த ஓபிஎஸ்!

இந்நிலையில், வராக நதியை தூய்மைப்படுத்தும் திட்டப் பணியை பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோவில் படித்துறையில் இருந்து இன்று (செப்டம்பர் 9) தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், பெரியகுளம் பகுதி தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: இளைஞர்கள் ஒருங்கிணைந்து தூர்வாரும் வாய்க்கால்: ஆக்கிரமிப்புகளால் தடைப்படும் தூர்வாரும் பணி

ABOUT THE AUTHOR

...view details