தமிழ்நாடு

tamil nadu

சென்னை திருநின்றவூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்; போடிநாயக்கனூர் ரயில் சேவை தாமதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 2:59 PM IST

சென்னை திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விரிசலை ரயில்வே அதிகாரிகள் உடனடியாக கண்டறிந்து சரிசெய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருநின்றவூர் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் அதிர்ச்சி
திருநின்றவூர் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் அதிர்ச்சி

சென்னை: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கடந்த ஜூன் 2-ஆம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்து உலகையை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விபத்துக்கு ரயில் பாதைகளில் கவாச் அமைப்பு இல்லாததே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில் சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறு தான் காரணம் என ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து, பயணிகள் ரயில்களில் தீ விபத்து என அடுத்தடு பல விபத்துகள் நடந்த வண்ணம் இருந்தது. இதுபோன்ற விபத்துகளை முற்றிலும் தடுக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் திருநின்றவூர் அருகே ஏற்பட்ட தண்டவாள விரிசலால் அப்பகுதியில் அதிகாலையே பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் விரிசலை உடனடியாக சரி செய்தனர்.

இதையும் படிங்க: ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத வந்த பெண்... தேர்வு எழுதவிடாமல் வெளியேற்றியதால் சர்ச்சை!

சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே காலை 7.30 மணி அளவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பெயரில் அங்கு சென்ற ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அந்த தண்டவாளத்தில் ரயில் வருவதை தடுக்கும் விதமாக சிக்னல்களை மாற்றி அமைத்தனர்.

மேலும் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 20 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற விரிசலை சரி செய்யும் பணி முடிந்தவுடன் வழக்கம்போல் ரயில்கள் சென்றது. இந்த ரயில் விரிசலால் போடிநாயக்கநல்லூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற விரைவு ரயில் சுமார் 30 மணி நேரம் தாமதமாக சென்றது.

இதை தவிர ஒரு மின்சார ரயிலும் தாமதமாக சென்றது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே துறை அதிகாரிகள் மழையால் இந்த தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: "நம் பணத்தை பிற மாநிலங்களுக்கு அள்ளியும் நமக்கு கிள்ளியும் மத்திய அரசு வழங்குகிறது" - அமைச்சர் மூர்த்தி!

ABOUT THE AUTHOR

...view details