தமிழ்நாடு

tamil nadu

மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு.. முன்ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 1:55 PM IST

Mansoor Ali Khan controversial speech: நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Court adjourns anticipatory bail plea in Mansoor Ali Khan controversial speech about Trisha
மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறித்து ஆபாசமாக பேசியதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது மன்சூர் அலிகான் தரப்பில், உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை எனவும், இது தொடர்பாக நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

காவல்துறை சார்பில், மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதி அல்லி தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான்!

ABOUT THE AUTHOR

...view details