தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் குறைந்துவரும் கரோனா பாதிப்பு

By

Published : Jun 6, 2021, 1:01 PM IST

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சென்னை
சென்னை

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மெள்ள மெள்ள குறைந்துவருகிறது. தொற்றை மேலும் குறைக்க அந்தந்த மண்டலங்களில் கூடுதல் மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டுவருகின்றன.

மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 30 ஆயிரம் நபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. நேற்று (ஜூன் 5) மட்டும் சென்னையில் 30 ஆயிரத்து 118 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் ஆயிரத்து 789 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம் சென்னையில் கரோனா பரவல் விகிதம் 5.9% ஆகக் குறைந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் மொத்தம் ஐந்து லட்சத்து 15 ஆயிரத்து 18 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு லட்சத்து 83 ஆயிரத்து 303 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து 24 ஆயிரத்து 290 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் ஏழாயிரத்து 425 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

நேற்று (ஜூன் 5) 23 ஆயிரத்து 603 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை 21 லட்சத்து 10 ஆயிரத்து 885 நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details