தமிழ்நாடு

tamil nadu

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை ஆய்வுசெய்த மாநகராட்சி ஆணையர்

By

Published : Sep 24, 2021, 11:20 AM IST

மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணியை நேற்று (செப். 23) மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

மாநகராட்சி ஆணையர்
மாநகராட்சி ஆணையர்

சென்னை: தமிழ்நாட்டில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்குப் பருவமழை காரணமாக நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம், மழைநீர் புகும் வாய்ப்புள்ளது. இதனால் தேக்கமாகும் மழைநீரில் டெங்கு, மலேரியா நோய்ப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது.

இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் திங்கள்கிழமை (செப். 20) முதல் வெள்ளிக்கிழமை (செப். 24) வரை, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதனிடையே சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் 695.31 கிமீ நீளமுள்ள, நான்காயிரத்து 254 மழைநீர் வடிகால்களில் தூர்வாருதல், ஆறாயிரத்து 891 உடைந்த நிலையில் உள்ள மனித நுழைவு வாயில் மூடிகளை மாற்றம் செய்யத் திட்டம் வகுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் நடைபெற்றுவரும் பணிகளைச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று (செப். 23) நேரில் சென்று ஆய்வுசெய்தார். இதனையடுத்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள குறிப்பில்,

”தற்போதுவரை திட்டமிடப்பட்ட பணிகளில் 469.07 கிமீ நீளமுள்ள 2,893 மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளும், 69 சிறு பழுதுகள் நீக்கும் பணியும் முடிவுற்றுள்ளன. மேலும், 722 இடங்களில் மனித நுழைவு வாயில் மூடிகளும் மாற்றப்பட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:போதைப்பொருள் தடுப்புத் திட்டம் விரைவில் தொடக்கம் - சென்னை மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details