தமிழ்நாடு

tamil nadu

புதிதாக 1,694 பேருக்கு கரோனா உறுதி!

By

Published : Sep 26, 2021, 8:43 PM IST

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1,694 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

corona update in tamilnadu
corona update in tamilnadu

சென்னை :தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 692 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,693 நபர்களுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என மொத்தம் 1,694 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 4 கோடியே 54 லட்சத்து 79 ஆயிரத்து 732 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 26 லட்சத்து 57 ஆயிரத்து 266 நபர்கள் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

குணமடைந்தோர் எண்ணிக்கை

அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1658 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 4 ஆயிரத்து 491 உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 10 நோயாளிகளும் என மொத்த 14 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 490ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,49,088

கோயம்புத்தூர் - 2,41,754

செங்கல்பட்டு - 1,68,317

திருவள்ளூர் - 1,17,514

ஈரோடு - 1,01,478

சேலம் - 97,859

திருப்பூர் - 92,679

திருச்சிராப்பள்ளி - 75,816

மதுரை - 74,502

காஞ்சிபுரம் - 73,792

தஞ்சாவூர் -73,090

கடலூர் - 63,264

கன்னியாகுமரி - 61,656

தூத்துக்குடி - 55,798

திருவண்ணாமலை - 54,212

நாமக்கல் - 50,393

வேலூர் - 49,314

திருநெல்வேலி - 48,811

விருதுநகர் - 45,996

விழுப்புரம் - 45,378

தேனி - 43,389

ராணிப்பேட்டை -42,979

கிருஷ்ணகிரி - 42,728

திருவாரூர் - 40,099

திண்டுக்கல் - 32,750

நீலகிரி - 32,603

கள்ளக்குறிச்சி - 30,859

புதுக்கோட்டை - 29,664

திருப்பத்தூர் - 28,920

தென்காசி - 27,263

தருமபுரி - 27,519

கரூர் - 23,512

மயிலாடுதுறை - 22,706

ராமநாதபுரம் - 20,313

நாகப்பட்டினம் - 20,374

சிவகங்கை - 19,785

அரியலூர் - 16,661

பெரம்பலூர் - 11,904

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1025

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1083

ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க : வெறிச்சோடிய திரையரங்குகள் - காரணம் கதைப் பஞ்சமா? கரோனா அச்சமா?

ABOUT THE AUTHOR

...view details