தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் 3 விகிதமாக குறைந்த கரோனா பரவல்

By

Published : Dec 14, 2020, 1:31 PM IST

சென்னை: மாநகராட்சியில் கரோனா பரவல் விகிதம் 3ஆக குறைத்துள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

corona spread was lower 3 percentage in chennai said chennai corporation
corona spread was lower 3 percentage in chennai said chennai corporation

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகரிப்பதாகத் தெரிகிறது. அவற்றைக் குறைக்க அந்தந்த மண்டலத்தில் அதிக மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு கரோனா பரவல் விகிதம் 30-க்கு மேல் இருந்த நிலையில் தற்போது அவை மூன்றாக குறைந்துள்ளது. கரோனா வைரசிலிருந்து குணமடைந்தவரின் விழுக்காடும் 97 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் ஒரு விழுக்காடாக உள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,

அண்ணா நகர் - 24,198 பேர்

கோடம்பாக்கம் - 23,686 பேர்

தேனாம்பேட்டை - 21,073 பேர்

ராயபுரம் - 19,392 பேர்

தண்டையார்பேட்டை - 16,946 பேர்

திரு.வி.க. நகர் - 17,551 பேர்

அடையாறு - 17,608 பேர்

வளசரவாக்கம் - 13,924 பேர்

அம்பத்தூர் - 15,590 பேர்

திருவொற்றியூர் - 6,701 பேர்

மாதவரம் - 7,975 பேர்

ஆலந்தூர் - 8,990 பேர்

சோழிங்கநல்லூர் - 5,846 பேர்

பெருங்குடி - 8,102 பேர்

மணலி - 3,497 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தம் இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 861 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு லட்சத்து 12 ஆயிரத்து 756 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எஞ்சியுள்ள மூன்றாயிரத்து 188 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் மூன்றாயிரத்து 917 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details