தமிழ்நாடு

tamil nadu

கரோனா: சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலவரம்

By

Published : Oct 19, 2020, 2:51 PM IST

சென்னை: மாநகராட்சி முழுவதும் கரோனாவால் 29 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே உள்ளதென சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  கரோனா: சென்னை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலவரம்
கரோனா: சென்னை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலவரம்

கரோனா வைரஸ் தொற்றினால் சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக் கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டுவருகிறது. இருப்பினும், தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டேசெல்கிறது.

தற்போது ஒரு தெருவில் மூன்று முதல் ஐந்து நபர்களுக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டால் அந்தப் பகுதியை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என மாநகராட்சி அறிவித்து வருகிறது.

அதன்படி, தற்போது சென்னை மாநகராட்சியில் 29 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

திருவொற்றியூர் - 03

மணலி - 04

தண்டையார்பேட்டை - 07

ராயபுரம் - 07

அண்ணா நகர் - 2

தேனாம்பேட்டை - 2

கோடம்பாக்கம் - 1

அடையார் - 2

சோழிங்கநல்லூர் - 1

உள்ளிட்ட பல கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளை செய்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details