தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் மேலும் 58 பேருக்கு கரோனா பாதிப்பு!

By

Published : May 5, 2022, 11:01 PM IST

திருப்போரூர் கூடுவாஞ்சேரி சாலையில் உள்ள சத்யசாய் கல்வி நிறுவனத்தில் 17 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 58 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 58 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை:தமிழ்நாட்டில் மேலும் புதிதாக வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கும் டெல்லியில் இருந்து வந்த ஒருவர் உட்பட 58 நபர்களுக்கு 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கூடுவாஞ்சேரி சாலையில் உள்ள சத்யசாய் கல்வி நிறுவனத்தில் 17 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் கரோனா வைரஸ் தொற்று பரவியதாக சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். மேலும் கல்லூரியில் உள்ள 900 மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதனால் மேலும் சில நாட்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 28 நபர்களுக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நபர்களுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு நபர்களுக்கும்; கோயம்புத்தூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபருக்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் மூலம் வந்த தலா ஒரு நபர் என 58 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் மே 5ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலில், ’தமிழ்நாட்டில் மேலும் புதியதாக 16 ஆயிரத்து 559 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் டெல்லியில் இருந்து வந்த ஒருவர் உட்பட 58 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 50 லட்சத்து 71 ஆயிரத்து 760 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 34 லட்சத்து 54 ஆயிரத்து 153 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 466 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து 59 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 662 என உயர்ந்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் மற்றும் பாதிப்பினால் கடந்த ஒரு மாதமாகவே யாரும் இறக்கவில்லை. எனவே, இறந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என தொடர்ந்து இருந்து வருகிறது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"வணிகர் நலனில் அக்கறை கொண்டது திமுக அரசு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details