தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க புதிய முயற்சி; கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 4:56 PM IST

Commissioner Sandeep Roy Rathore press meet: சென்னையில் நடைபெரும் கொலை குற்றங்களைத் தடுக்க முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை செய்து வருவதாக காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Commissioner Sandeep Roy Rathore press meet
கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

சென்னையில் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க புதிய முயற்சி

சென்னை: சென்னை பெருநகர பகுதிகளில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் மெகா பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று (ஆக.1) சென்னை பெருநகர் அண்ணாநகர் காவல் மாவட்டம் சார்பாக அண்ணாநகர், நடுவங்கரை அகர்வால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மெகா குறைதீர் முகாமினை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்.

அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இது 2வது முகாம் ஆகும். சென்ற மாதம் நடந்த முகாமில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாக கலந்து கொண்டனர்.

தற்போது, அண்ணாநகர் மாவட்டத்தில், 7 காவல் நிலையங்கள், 2 மகளிர் காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் இங்கே உள்ளனர். சுமார் 150 மனுதாரர்கள் நேரடியாக இந்த முகாமிற்கு வந்துள்ளனர். அவர்களின் மனுக்களை விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: World Vulture Awareness Day : பறவைகளின் அரசன் "பாறு கழுகு"... அழிவில் இருந்து மீளுமா! அழிவிற்கு என்ன காரணம்?

மேலும், பொதுமக்கள் தங்களது குறைகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தால், அந்த புகார் குறித்து உடனடியாக தீர்வு காணப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பட்டினப்பாக்கம் கொலை வழக்கில், குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் நோக்கம் என்பது குறித்து தற்போது கூற முடியாது. இதில் வேறு யார்? யார்? இருக்கின்றனர் என்பதைக் கண்டறிய 3 சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் கொலை குற்றங்களை தடுக்க முன்கூட்டியே குற்றவாளிகளை கண்காணித்து தடுக்கும் பணிகளில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். போலி இ-சலான் மோசடி குறித்து இதுவரை சைபர்கிரைமில் வழக்குகள் வரவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் வந்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது என பேட்டியில் தெரிவித்தார்.

இதையும் படிங்க:காதல் திருமணம் செய்த மகளுக்கு துணை போனதால் ஆத்திரம்.. சொத்துக்காக கணவனை கடத்தி மனைவி சித்ரவதையா? என்ன நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details