தமிழ்நாடு

tamil nadu

Cyclinder Price Hike : காலையிலேயே ஷாக்! சிலிண்டர் விலை இவ்வளவு உயர்வா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 7:20 AM IST

Commericial Cyclinder Price hike : சென்னையில் 19 கிலோ எடையிலான வணிக சிலிண்டரின் விலை 203 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Cyclinder
Cyclinder

சென்னை :உணவகம் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் 203 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் 19 கிலோ எடையிலான வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 203 ரூபாய் வலை உயர்ந்து ஆயிரத்து 898 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 19 கிலோ எடையிலான வணிக சிலிண்டர் 158 ரூபாய் விலை குறைக்கப்பட்டு இருந்த நிலையில், அயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (அக்டோபர். 1) வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 203 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்து இருப்பது உணவகம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு உள்ளோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் உணவகங்களில் உணவுப் பொருட்களில் விலைப் பட்டியலில் மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க :அதிமுகவும் பாஜகவும் பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details