தமிழ்நாடு

tamil nadu

Chennai Crime News:ஹெல்மெட்டை திருடிய காவல் ஆய்வாளர்.. சென்னை குற்றச் செய்திகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 6:33 PM IST

Updated : Oct 14, 2023, 11:04 PM IST

சென்னையில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற குற்ற சம்பவங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

சென்னை குற்ற சம்பவங்கள்
சென்னை குற்ற சம்பவங்கள்

தங்கம் உருக்கும் பட்டறைக்கு வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சீல்:சென்னை பிராட்வேயில் உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் இயங்கிவந்த நகை உருக்கும் பட்டறை ஒன்றில், கடத்தல் தங்கம் உருக்கபடுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, நகை உருக்கும் பட்டறையில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த பட்டறையில், தங்கக்கட்டிகள் இருப்பதை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, கண்டுபிடிக்கபட்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை விசாரித்ததில், கடத்தல் கும்பல் கொடுத்தது எனத் தெரியவந்ததாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் 4 பைகளில் இருந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பட்டறையில் இருந்த 5 பேரையும் தியாகராயர் நகரில் உள்ள வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

2 ஆயிரத்து 200 கிலோ குட்கா மற்றும் 23 லட்சம் பணம் பறிமுதல்:சென்னை ஆர்.கே.நகர் பகுதிக்கு உட்பட்ட எழில் நகர் மேம்பாலம் அருகே, ஆர்.கே.நகர் போலீசார் நேற்றிரவு (அக்.13) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் அருணாச்சலம் மற்றும் ஜோசப் ஆகிய இருவரும் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதைப்பொருட்களை கடத்தி வந்துள்ளனர்.

இதைக் கண்ட போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், இதற்கெல்லாம் ஏஜெண்ட் குலாம் மொய்தீன் தான் காரணம் என தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவரை அம்பத்தூரில் பிடித்த போலீசார், அவர் மூலமாக மொத்த குடோனிற்கு அதிரடியாக சென்று, சுமார் 2 ஆயிரத்து 200 கிலோ குட்கா மற்றும் 23 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பானது 18 லட்சம் வரை இருக்கக்கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கத்தில் சைக்கிள் திருட்டு: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விலை உயர்ந்த சைக்கிள்கள் அடிக்கடி திருடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், இளம்பெண் ஒருவர் பட்டப் பகலில் சாதாரணமாக நடந்து சென்று அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, தான் சைக்கிள் போல் உரிமையாக திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை குற்ற சம்பவங்கள்

இதன் அடிப்படையில், சென்னை கீழ்ப்பாக்கம் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் சைக்கிள்களை திருடக்கூடிய அந்த மர்ம பெண்ணை, கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நட்சத்திர விடுதி பார்க்கிங்கில் ஹெல்மெட்டை திருடிய காவல் உதவி ஆய்வாளர்:இந்த மாதம்அக்.5ஆம் தேதி, அசோகா ஹோட்டலில் நிறுத்திவைத்திருந்த தனது வாகனத்தின் ஹெல்மெட் காணாமல் போனதாக சத்ய நாராயணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், விஜயன் என்ற காவல் உதவி ஆய்வாளர் ஹெல்மெட்டை திருடியிருப்பது தெரியவந்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சியானது சமூக வலையளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனே முக்கியம் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!

Last Updated :Oct 14, 2023, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details