தமிழ்நாடு

tamil nadu

கமல்ஹாசனிடம் கார் சாவியை பெற்றுக்கொண்ட கோவை ஷர்மிளா!

By

Published : Jul 7, 2023, 9:57 PM IST

கோவையின் முதல் தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, இன்று சென்னையில் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில், தனக்கு பரிசாக வழங்கப்பட்ட கார் சாவியை நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

கார் சாவியை பெற்றார் ஷர்மிளா
கார் சாவியை பெற்றார் ஷர்மிளா

சென்னை:கோவையின் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுநர் என அறியப்பட்டவர், ஓட்டுநர் ஷர்மிளா. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமான இவர், தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். சமீபத்தில் தி.மு.க எம்பி. கனிமொழி, சர்மிளா பணிபுரியும் பேருந்தில் பயணம் செய்தார்.

அப்போது ஏற்பட்ட சில பிரச்சினைகளின் காரணமாக ஷர்மிளாவை, அவர் பணிபுரிந்து வந்த தனியார் பேருந்து நிறுவத்தின் உரிமையாளர் ஷர்மிளாவை பணியை விட்டு நீக்கினார். இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து இன்று (ஜூலை 07) கார் சாவியை கமல்ஹாசனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார் ஷர்மிளா.

முன்னதாக கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கார் பரிசாக வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கமல் பண்பாட்டு மையம் சார்பாக சர்மிளாவுக்கு கார் வாங்குவதற்கான முன் பணத்தையும் கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு வழங்கியிருந்தார்.

16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காரின் புக்கிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், மகேந்திரா கம்பெனியின் மரோசோ (marazzo) எனும் காரை ஷர்மிளா வாங்கியுள்ளார். அதன்பின் இன்று (ஜூலை 07) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ம.நீ.ம தலைமை அலுவலகத்தில் ஷர்மிளா தனது கார் சாவியை, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார்.

மேலும் விபத்தில் பெற்றோரை இழந்த சேலம் மாணவி அமுதாவிற்கு 3 இலட்சம் ரூபாய் நிதியுதவி கமல்ஹாசன் வழங்கினார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே விபத்தில் தாய், தந்தை மற்றும் அக்கா என மூவரையும் இழந்த அமுதா என்ற மாணவிக்கு உயர்கல்வி பயில பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வரும் நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ம.நீ.ம தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை அமுதா சந்தித்தார்.

மேலும் மாணவி அமுதாவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார். மேலும் மாணவியின் உயர்கல்விக்கு உதவும் வகையில் 3 இலட்சம் ரூபாய் தொகையை வங்கியில் (fixed deposit) வைப்பு நிதியாக வரவு வைத்து ரசீதையை கையில் வழங்கினார்.

இதையும் படிங்க:"எந்த ஒரு மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது"- முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details