தமிழ்நாடு

tamil nadu

சமூக நீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 9:56 AM IST

Updated : Nov 27, 2023, 10:51 AM IST

V.P.Singh statue in chennai: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பின்படி, இன்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறக்கப்படவுள்ளது.

V.P.Singh statue in chennai
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-க்கு நாளை சிலை திறப்பு

சென்னை:கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூக நீதி காவலரான வி.பி.சிங்கிற்கு (Vishwanath Pratap Singh) சென்னையில் சிலை அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர்களது வேண்டுகோளை ஏற்று, மெரினா கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அவரது முழு உருவச் சிலை அமைத்திட பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று (நவ.27) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வி.பி.சிங் சிலையினை திறந்து வைக்கிறார்.

மாவீரர்கள் நாள்: தமீழிழத்தில் மக்களுக்காகப் போராடி இன்னுயிர் ஈத்த வீரர்களை நினைவு கூறும் தினமாக, நவம்பர் 27ஆம் தேதி மாவீரர்கள் தினமாக ஈழத்தில் பார்க்கப்படுகிறது. இதர பிற்படுத்தபட்டோர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக மண்டல கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய சமூக நீதி காவலராக பார்க்கபடுகின்ற வி.பி.சிங்கிற்கு, தமீழிழ மாவீரர்கள் தினத்தன்று சென்னையில் சிலை திறக்கப்படவுள்ளது.

யாருக்கெல்லாம் அழைப்பு?வி.பி. சிங் சிலை திறப்பு நிகழ்ச்சியில், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். மேலும் வி.பி.சிங் மனைவி சீதா குமாரி, அவருடைய மகன்கள் அஜயா சிங், அபய் சிங் ஆகியோர் பங்கு பெறுகிறார்கள். மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான அழைப்பு என்பது முறையாக அனைவரிடம் கொண்டு சேர்க்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வி.பி.சிங்கும் தமிழகமும்:‘அரசியல் நாகரீகத்தின் சின்னம் வி.பி.சிங்’ என மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி குறிப்பிட்ட வார்த்தைகள் இது. 1989-இல் தேசிய முன்னணி தொடக்க விழா நிகழ்வை மிகப்பெரிய அளவில் சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த மாநாடை இன்றளவும் திராவிட கழகங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. பெரியாரை தனது தலைவராகவும், கருணாநிதியை தனது சகோதரனைப் போலவும் ஏற்றுக் கொண்டவர் வி.பி.சிங்.

அரசில் வட்டாரம் கூறுவது என்ன? திமுக மகளிர் அணி சார்பாக ஒத்த கருத்துடைய பெண் தலைவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் விதமாக, மிகப்பெரிய அளவில் சென்னையில் மாநாடு நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல பெண் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழலில், பெண் தலைவர்களை ஒன்று சேர்க்கும் ஒரு மாநாடாகவும் அரசியல் வட்டாரத்தில் அன்றைய மாநாடு பார்க்கப்பட்டது.

அதே போல, ஒரு கண்ணோட்டத்தைதான் இன்று நடைபெறுகின்ற வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்வும் பார்க்கப்படுகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்தியா கூட்டணியில் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் நிகழ்வுக்கு ஒரு ஒத்திகை நிகழ்வாகத்தான் அரசியல் வட்டாரத்தில் இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

Last Updated : Nov 27, 2023, 10:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details