தமிழ்நாடு

tamil nadu

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

By

Published : Dec 19, 2022, 2:04 PM IST

Updated : Dec 19, 2022, 3:40 PM IST

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம் வழங்கலாமா என்பது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புக்களை குறைத்து ரொக்க பணம் வழங்கலாமா என்பது குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிசம்பர் 19) நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபட்ட வெல்லம் உள்ளிட்ட சில பொருட்கள் பயன்படுத்தபடாத முறையில் இருந்ததாக எதிர் கட்சியினர் குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், இந்த ஆண்டு அதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கபட்டது. கடந்த ஆண்டு, பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், மிளகாய்தூள், மல்லித்தூள், கோதுமை மாவு, ஏலக்காய், மிளகு, புலி, ரவை, முந்திரி, ஆவீன் நெய், கடுகு, சீரகம், கிராம்பு, உப்பு, திராட்சை, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கரும்பு அள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கபட்டன.

ஆனால், இந்தாண்டு 21 பொருட்களுக்கு பதில் 6 பொருட்கள் மட்டும் மக்களுக்கு வழங்கிவிட்டு ரூ.1000 ரூபாய் ரொக்க பணமாக கொடுத்து விடலாமென அலோசிக்கபட்டதாக கூறப்படுகிறது. இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது.'

இதையும் படிங்க:சீனா விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Last Updated : Dec 19, 2022, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details