தமிழ்நாடு

tamil nadu

ஈடில்லா ஞானத்தைத் தந்தார் குடியரசுத் தலைவர் - ஸ்டாலின் நெகிழ்ச்சி

By

Published : Aug 3, 2021, 2:04 PM IST

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மூன்று புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர்
President Kovind

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட் 3) காலை சென்னையிலிருந்து கோயம்புத்தூர் சூலூர் விமான படைத்தளத்திற்குச் சென்றார்.

அவரை வழியனுப்ப சென்னை விமான நிலையத்திற்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் ஏழு புத்தகங்களை அவருக்குப் பரிசாக கொடுத்தார். அப்போது ராம்நாத் தான் எழுதிய மூன்று புத்தகங்களை மு.க. ஸ்டாலினுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

ஈடில்லா ஞானத்தைத் தந்தார் குடியரசுத் தலைவர்

புத்தகங்களில் பரிமாறிய அன்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு அன்போடு கொடுத்த புத்தகங்களின் விவரம் பின்வருமாறு:

புத்தகங்களின் விவரம் எழுத்தாளரின் பெயர்
  • வாடிவாசல்
சி.சு. செல்லப்பா
  • செம்பருத்தி ஆங்கில பதிப்பு
தி. ஜானகிராமன்
  • திருக்குறளின் ஆங்கிலப் பதிப்பு
  • ‘தலைமுறைகள்’ ஆங்கில பதிப்பு
நீல. பத்மநாபன்
  • 'பண்டைய எழுத்து முறை’ (ஆங்கிலம்)
கே. ராஜன்
  • ‘கரிசல் கதைகள்’ ஆங்கில பதிப்பு
கி. ராஜநாராயணன்
  • ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’ ஆங்கில பதிப்பு
ராஜம் கிருஷ்ணன்

ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசு

சென்னை விமான நிலையத்தில் தன்னை வழியனுப்ப வந்த மு.க. ஸ்டாலினுக்கு, ராம்நாத் கோவிந்த் மூன்று புத்தகங்களைப் பரிசளித்தார். ’தி ரிபப்ளிக் எத்திக்ஸ்’ எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் புத்தகங்கள் ராம்நாத் கோவிந்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் தொகுப்பாகும்.

குடியரசுத் தலைவரின் அன்பு பரிசு

குடியரசுத் தலைவருக்கு நன்றி

இது தொடர்பாக ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ’தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவருக்கு நன்றி. எங்கள் தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்துவைத்ததுடன், தன்னுடைய புத்தகங்கள் மூலம் ஞானத்தையும் பகிர்ந்துகொண்டார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடியரசு தலைவர் வருகை : நீலகிரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு

ABOUT THE AUTHOR

...view details