தமிழ்நாடு

tamil nadu

சீரியல் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளர் கைது

By

Published : Jun 13, 2022, 9:12 PM IST

சென்னையில் சீரியல் துணை நடிகையை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, வீட்டிற்கு அழைத்து, பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சீரியில் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளர் கைது
சீரியில் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளர் கைது

சென்னை: இளம்பெண் ஒருவர், தொலைக்காட்சித்தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கும் வளசரவாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் காசிநாதன் (42) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

அப்போது தனக்கு திரைப்பட இயக்குநர்கள் நிறைய பேருடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் கூறி பெண்ணிற்கு கதாநாயகி வாய்ப்பு வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார், அந்த ஒளிப்பதிவாளர். மேலும், இதற்கு "போட்டோ ஷூட்" நடத்த வேண்டும் என்று கூறிய ஒளிப்பதிவாளர் துணை நடிகையை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார்.

இதனை நம்பிய துணை நடிகையும் நேற்றிரவு (ஜூன் 12) ஒளிப்பதிவாளர் வீட்டிற்குச்சென்றார். அப்போது மதுபோதையில் இருந்த ஒளிப்பதிவாளர் திடீரென துணை நடிகையிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த துணை நடிகை, அவரது பிடியிலிருந்து விலகி தப்பினார்.

தொடர்ந்து இது குறித்து அப்பெண் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஒளிப்பதிவாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:17 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details