தமிழ்நாடு

tamil nadu

'நடைபயிற்சி செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும்' - குழந்தைகள் உரிமை ஆர்வலர்

By

Published : Jan 29, 2023, 4:30 PM IST

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு நடைபயிற்சி செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை ஆர்வலர் வீடியோ வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

நடைபயிற்சி செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்

சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை ஆர்வலர் கன்னியாபாபு சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டிஜிபி அலுவலகம் எதிரே இன்று (ஜன.29) காலை நடைபயிற்சி மேற்கொள்ளும்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் பாலியல் ரீதியாக சீண்டல் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதனை தான் தட்டிக் கேட்டதாகவும், அதன் பின்பு ரோந்து காவலர்கள் யாரும் வராததால் நேரடியாக டிஜிபி அலுவலக வாசலில் உள்ள காவலரிடம் தெரிவித்ததாகவும், அவர்கள் தன்னை ஆபாசமாகப் பேசும்போது, தான் அவர்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அடையாளம் தெரியாத நபர்கள், தன்னைத் தாக்க முற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கும் எனவும்; அதை அடிப்படையாக வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக சென்னையில் காலை நேரங்களில் அதிக பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்வதாகவும், காலையிலேயே கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் செல்வதால் அவர்களுக்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது தற்காத்துக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறி தான் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, பெண்கள் பாதுகாப்பாக உணர அதிகாலையிலும் இரவு நேரங்களிலும் காவலர்கள் ரோந்துப் பணியை அதிகமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் சென்னை காவல் துறை சமூக வலைதளப் பக்கத்தில் குழந்தைகள் உரிமை ஆர்வலர் கூறிய கருத்துக்களை கேட்டுக்கொண்டதாகவும், நீங்கள் கூறிய தகவல்களை வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இன்ஸ்டாகிராம் காதலால் 5 மாத கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details