தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் மண்டலப் புற்றுநோய் மையம்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைப்பு!

By

Published : Feb 6, 2021, 8:30 AM IST

திருநெல்வேலி: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 35 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மண்டலப் புற்றுநோய் மையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.

chief-minister-inaugurated-the-tirunelveli-regional-cancer-center
chief-minister-inaugurated-the-tirunelveli-regional-cancer-center

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 35 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மண்டலப் புற்றுநோய் மையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.

மேலும், 31 கோடியே 78 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டடங்களையும் திறந்துவைத்து, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ நேரியல் முடுக்கி கருவி (Linear Accellarator) நிறுவுவதற்காக மூன்று கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கதிரியக்கவியல் புற்றுநோய் பிரிவுக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள்.

அத்துடன் 26 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவக் கருவிகளின் சேவையைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பிப்ரவரி 8ஆம் தேதி யார் யார் பள்ளிக்குச் செல்ல வேண்டும்?

ABOUT THE AUTHOR

...view details