தமிழ்நாடு

tamil nadu

அப்டேட் ஆன அரசியல் கட்சிகள்: கூகுள் பே, போன் பே மூலமாக வாக்காளர்களுக்குப் பணம் ?

By

Published : Mar 5, 2021, 5:08 PM IST

சென்னை: கூகுள் பே, போன் பே, மூலமாக வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க வங்கிகளில் பணம் பரிவர்த்தனை கண்காணிக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் கூட்டணி, வேட்பாளர்கள் நேர்காணல் என அரசியல் கட்சிகள் தீவிரமான பணியில் ஈடுபட்டுவருகின்றன. அதேவேளையில் தேர்தல் நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மிக தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, அப்போது பேசிய அவர், "வாகன சோதனையில் நேற்று வரை பணம், பரிசுப்பொருள்கள் என 15.20 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. இதில், பணம் மட்டும் 14.13 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா, வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிக்க இரண்டு தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் திங்கள்கிழமை தமிழ்நாடு வருகின்றனர்.

மாவட்டத் தேர்தல் அலுவலர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் குழுவோடு இணைந்து தேர்தல் நேரத்தில் அதிகம் செலவு செய்யும் தொகுதி கண்டறியப்படும்.

கூகுள் பே, போன் பே மூலமாக பணம் விநியோகம் செய்யப்படுவது தடுப்பது தொடர்பாக வங்கி மூலமாக கண்காணிப்படும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details