தமிழ்நாடு

tamil nadu

'செஸ்-க்காக வந்தேன்... சேலை வாங்கிச் செல்கிறேன்': கென்யா பயிற்சியாளர்

By

Published : Aug 9, 2022, 2:05 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளான இன்று, கென்ய பயிற்சியாளர் தமிழர்களின் உடையில் வருகை தந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், தமிழ்நாட்டில் இருந்து தனது தாயாருக்கு சேலை வாங்கிச்செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட்: தமிழர்களின் உடையில் உலா வந்த கென்யா பயிற்சியாளர்!
செஸ் ஒலிம்பியாட்: தமிழர்களின் உடையில் உலா வந்த கென்யா பயிற்சியாளர்!

சென்னை: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில், 186 நாடுகளில் இருந்து வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். நிறைவு நாளான இன்று (ஆக. 9), 11ஆவது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கென்யா நாட்டு அணியின் பயிற்சியாளர் ஆண்டிவோ மோசஸ், இந்தியாவின் கலாச்சாரத்தை வியந்து, தமிழர்கள் அணியும் உடையில் அரங்கத்திற்கு வருகை தந்தார். இதுதொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய ஆண்டிவோ மோசஸ், 'முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளேன்.

செஸ் ஒலிம்பியாட்: தமிழர்களின் உடையில் உலா வந்த கென்யா பயிற்சியாளர்!

இங்குள்ள கலாச்சாரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். குறிப்பாக, இங்குள்ள குடும்ப கலாச்சாரம் எனக்கு பிடித்துள்ளது. நான் சுற்றிப் பார்ப்பதற்காக கடற்கரைக்கு செல்லும்போது, எங்கு பார்த்தாலும் குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தனர். இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஆடையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

நான் வெளியில் சென்றிருந்தபோது இங்கு இருக்கும் ஆடையை வாங்கினேன், அதை இப்போது அணிந்திருக்கிறேன். என்னுடைய மூத்த சகோதரர்களுக்கு மேலாடையும், என்னுடைய தாய்க்கு சேலையும் வாங்கி இருக்கிறேன். இங்கு இருக்கும் அனைத்து மனிதர்களும் சகஜமாக நட்புடன் பழகுகிறார்கள். எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது" என கூறினார்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி மிஸ்ஸிங்?

ABOUT THE AUTHOR

...view details