தமிழ்நாடு

tamil nadu

மாண்டஸ் புயல் தாக்கம்: பெட்ரோல் பங்க் சேதம்

By

Published : Dec 10, 2022, 10:43 AM IST

மாண்டஸ் புயலின் தாக்கத்தால், சென்னையில் உள்ள ஒரு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதேபோல் பெட்ரோல் பங்க் சேதமடைந்துள்ளது.

மாண்டஸ் புயல் தாக்கம்: பெட்ரோல் பங்க் சேதம்
மாண்டஸ் புயல் தாக்கம்: பெட்ரோல் பங்க் சேதம்

சென்னை:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல், இன்று அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்தது. அப்போது சென்னையில் அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசியது.

இதனால் ஆங்காங்கே மரம் மற்றும் மின் கம்பங்கள் விழுந்தன. இதனை அப்புறப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் சேதமடைந்தன.

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் பெட்ரோல் பங்க் சேதமடைந்துள்ளது

அதேபோல் எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இருந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்ததில், அருகே இருந்த பெட்ரோல் பங்க் பாதியளவு சேதமடைந்துள்ளது. ஆனால், இரண்டு இடத்திலும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாண்டஸ் புயல் தாக்கம் எதிரொலி: சென்னை வந்த 9 விமானங்கள் ஹைதராபாத்துக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details