தமிழ்நாடு

tamil nadu

சென்னை புறநகர் ரயில் அடுத்தடுத்து இரு முறை தடம் புரண்டு விபத்து

By

Published : Dec 6, 2022, 11:09 PM IST

சென்னை புறநகர் ரயில் அடுத்தடுத்து இரு முறை தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் தடம் புரண்டு விபத்து
ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை:கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருவொற்றியூர் நோக்கி புறப்பட்ட புறநகர் ரயில், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தின் 7-வது நடைமேடைக்கு வந்தபோது திடீரென ரயிலின் கடைசி இரு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஏற்கெனவே ரயில் என்ஜினின் முகப்பு விளக்கு பழுதாகி திருவொற்றியூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஊழியர்கள் சரி செய்த நிலையில், அங்கிருந்து காலிப்பெட்டிகளுடன் பேசின்பிரிட்ஜ் நோக்கி வந்த போது தடம் புரண்டது.

பெட்டிகள் தடம் புரண்டபோது பயணிகள் யாரும் இல்லாததால் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், தடம் புரண்ட பெட்டிகளை மீட்டு மீண்டும் கடற்கரை ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் எம்.எம்.சி அருகே சென்றபோது கடைசிப்பெட்டி மீண்டும் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தடம் புரண்ட பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:பெண்ணுடன் தகாத உறவை முறிக்க மறுப்பு - இளைஞர் கல்லால் அடித்துக்கொலை

ABOUT THE AUTHOR

...view details