தமிழ்நாடு

tamil nadu

2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை!

By

Published : Dec 29, 2022, 8:09 AM IST

போதையில் இரண்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை: ராயபுரம் பகுதியை சேர்ந்த 46 வயதான நபர் ஒருவர், கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 13ல் கடலில் மீன்பிடித்து விட்டு வீட்டிற்கு வந்து போதையில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த உறவினரின் இரண்டு வயது சிறுமியை, அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது வழக்கு தொடர்பான விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி எம். ராஜலட்சுமி முன் நடைபெற்றது.

விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தண்டனை விதிக்கப்பட்ட நபரை காவல்துறையினர், புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:புனேவில் 15 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details