தமிழ்நாடு

tamil nadu

பூரண உடல் நலம் பெற்று விஜயகாந்த் வீடு திரும்பினார்: சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 11:26 AM IST

vijayakanth discharge: சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பியதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜயகாந்த் உடல்நிலை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் பொது நிகழ்ச்சி, கட்சிக் பொதுக் கூட்டத்தில் பங்கு பெறுவது என எந்த நிகழ்வுகளிலுமே அவர் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளரும், நடிகருமான விஜயகாந்த் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் காரணமாக மருத்துவ பரிசோதனைக்காகச் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சளி மற்றும் இருமல் அதிகமாக அவருக்கு இருப்பதால் ஒரு சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பிலிருந்து மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவவே கடந்த 23ஆம் தேதி மியாட் மருத்துவமனை தரப்பிலிருந்து விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவர் மருத்துவச் சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் தேமுதிக பொருளாரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த்தும் அவரது உடல் நிலை குறித்தான தகவல்களை அவ்வப்போது விடியோ மூலமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி மியாட் மருத்துவமனை விஜயகாந்தின் உடல் நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் அவருக்கு நுரையீரலில் சளி அதிகமாகச் சேர்ந்துள்ளதால் அவர் மேலும் 14 நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனவும் அவருக்குத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்து.

இந்நிலையில் மியாட் மருத்துவமனை தரப்பிலிருந்து இன்று(டிச.11) காலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்றூ வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருவள்ளுவர் ஞானம், அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்து பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details