தமிழ்நாடு

tamil nadu

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க உத்தரவு

By

Published : Dec 23, 2022, 6:46 AM IST

அரசின் அறிவிப்பின்படி பொறியியல் பட்டம் பெற்று பிஎட் படித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை, பட்டதாரி ஆசிரியராக நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

சென்னை:2015ஆம் ஆண்டுதமிழ்நாட்டில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வழிகாட்டுதல்படி, பொறியியல் பட்டதாரிகளும் பிஎட் படிக்கலாம், பின்னர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற உரிய பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்று தமழிநாடு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி 2015-17ஆம் காலகட்டத்தில் பிஎட் கணிதம் படிப்பில் சேர்ந்து, ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றவர் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராக சைனி பிரியா. இவர், பொறியியல் முடித்து பிஎட் முடித்தவர்களை கணக்கில் கொள்ளாமல், பிற இளநிலை கலை, அறிவியல் பாடங்களில் பிஎட் முடித்தவர்களையே பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், பொறியியல் பட்டதாரியான மனுதாரர் பிஎட் படிப்பை முடித்து ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளதால் அவரை 4 வாரங்களில் ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விமானத்தில் சீக்கியர்களின் கிர்பான் வாளுக்கு தடை..? - டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details