தமிழ்நாடு

tamil nadu

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

By

Published : Oct 19, 2021, 10:54 PM IST

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

சென்னை: புதுச்சேரி, கலி தீர்த்தல் குப்பம் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய எர்லம் பெரைரா, எல்.கே.ஜி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரின் வாக்கு மூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாகவும், மருத்துவ ஆதாரங்கள், வலுவாக இல்லை என்று கூறி ஆசிரியரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

இதை எதிர்த்து திருபுவனை காவல் துறையினர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் பெரைரா குற்றம் புரிந்துள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

நீதிபதி வேதனை

மேலும், வழக்கின் புலன் விசாரணையில் உள்ள குறைகளால் குற்றவாளிகள் தப்பி விடுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இதுபோன்ற வழக்குகளில், குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் தேட வேண்டும் எனவும் கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:கொள்ளையில் ஈடுபட்ட நால்வரைப் பிடித்த காவல் துறையினர்; ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details