தமிழ்நாடு

tamil nadu

மாமுல் தர மறுத்த தள்ளுவண்டி கடை மீது தாக்குதல்; ஓய்வுபெற்ற ஆய்வாளர் மீது வழக்கு!

By

Published : Oct 23, 2019, 3:29 PM IST

சென்னை: தள்ளுவண்டி கடையை அடித்து உடைத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் கிடைத்திருப்பதையடுத்து ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் சிவராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

cctv-video

பெரியமேடு சாமி தெரு பகுதியில் தள்ளுவண்டி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் அப்துல் ரகுமான். பெரியமேடு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த சிவராஜன், கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதியன்று அப்துல் ரகுமானிடம் மாமுல் கேட்டதாகவும் அதற்கு ரகுமான் தர மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக சிவராஜன் அதே காவல் நிலையத்தில் சேர்ந்த சில காவலர்களுடன் அப்துல் ரகுமானின் தள்ளு வண்டியை அடித்து உடைத்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற பின் சிவராஜன், அப்துல் ரகுமானின் தள்ளுவண்டி கடையை சகாக்களுடன் சேர்ந்து அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது.

முன்னாள் காவல் ஆய்வாளர் மீது வழக்கு!

பின்னர், தள்ளுவண்டி கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக சிவராஜன் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலச் செயலாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சிவராஜன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. இதைதொடர்ந்து தற்போது சிவராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எல்இடி டிவிக்களை கொள்ளையடிக்கும் திருடர்கள்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details