தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் அதிகரிக்கும் கரோனா!

By

Published : Apr 12, 2021, 3:38 PM IST

சென்னை 6 மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

corona_update
corona_update


சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட சில மண்டலங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. அவற்றைக் குறைக்க மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.

சென்னையில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 124 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்ற மாதம் 3 விழுக்காடாக இருந்த கரோனா பரவல் விகிதம் தற்போது, 6 விழுக்காடுக்கு மேல் உள்ளது. இதேபோல் 92 % பேர் குணம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலவாரியாக சிகிச்சை பெறுபவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  1. அண்ணா நகர் - 1753 பேர்

  2. கோடம்பாக்கம் - 1460 பேர்

  3. தேனாம்பேட்டை - 1819 பேர்

  4. ராயபுரம் - 1444 பேர்

  5. தண்டையார்பேட்டை - 978 பேர்

  6. திரு.வி.க. நகர் - 1290 பேர்

  7. அடையாறு - 975 பேர்

  8. வளசரவாக்கம் - 873 பேர்

  9. அம்பத்தூர் - 1179 பேர்

  10. திருவொற்றியூர் - 400 பேர்

  11. மாதவரம் - 604 பேர்

  12. ஆலந்தூர் - 757 பேர்

  13. சோழிங்கநல்லூர் - 363 பேர்

  14. பெருங்குடி - 774 பேர்

  15. மணலி - 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
  16. சென்னையில் மொத்தம் இரண்டு லட்சத்து 65 ஆயிரத்து 126 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 041 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 15 ஆயிரத்து 761 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எவருகின்றனர். 4 ஆயிரத்து 324 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று மட்டும் 14 ஆயிரத்து 745 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details