தமிழ்நாடு

tamil nadu

'இரவு 8 மணியுடன் சென்னையில் மேம்பாலங்கள் மூடப்படும்' - போக்குவரத்து காவல் துறை!

By

Published : Jul 12, 2020, 12:43 PM IST

சென்னை: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இரவு நேரத்தில் மேம்பாலங்களில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இரவு 8 மணியுடன் மேம்பாலங்கள் மூடப்படும் என போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

 chennai bridge will be closed at night
chennai bridge will be closed at night

சென்னையில் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சென்னையில் சில பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாகக் குற்றசாட்டு எழுந்தது.

குறிப்பாக, பெரம்பூரில் உள்ள முரசொலி மேம்பாலத்தில் கடந்த ஜூன் 10ஆம் தேதி அதிகாலையில் 15க்கும் அதிகமான இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டதாக, அந்தப் பகுதிவாசிகள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல் துறை அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை அடையாளம் கண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க, சென்னையில் இரவு 8 மணியுடன் மேம்பாலங்கள் மூடப்படும் என சென்னை போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details