தமிழ்நாடு

tamil nadu

திருநின்றவூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை!

By

Published : Oct 21, 2019, 12:06 AM IST

சென்னை: திருநின்றவூர் அருகே தனியார் வங்கி ஏடிஎம்மை உடைத்து நான்கு லட்சம் கொள்ளையடித்துச் சென்றவர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Chennai atm robbery

சென்னை திருநின்றவூர் அடுத்த பண்டி காவனூர் பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏடிஎம் ஒன்று இயங்கிவருகிறது. திருநின்றவூரில் இருந்து பெரியப்பாளையம் செல்லும் சாலையிலுள்ள இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க அப்பகுதி மக்கள் சென்றுள்ளனர். அப்போது ஏடிஎம் இயந்திரம் உடைந்து இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்தனர். அப்போது அதிலிருந்த ரூ. 4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கண்காணிப்பு கேமிராவில் ஸ்ப்ரே அடித்து இயந்திரத்தில் துளையிட்டு கொள்ளையடித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

திருநின்றவூர் அருகே கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு கொள்ளையர்களையும் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இதனிடையே இதே கொள்ளையர்கள் திருநின்றவூரில் உள்ள மற்றொரு தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்பது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் கொலை - காதலனுடன் மகள் கைது

Intro:சென்னை திருநின்றவூர் அருகே வங்கி ஏடிஎம்மை உடைத்து 4 லட்சம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்Body:சென்னை திருநின்றவூர் அருகே வங்கி ஏடிஎம்மை உடைத்து 4 லட்சம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை திருநின்றவூர் அடுத்த பண்டி காவனூர் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு இந்தியா ஒன் என்ற ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. திருநின்றவூரில் இருந்து பெரியப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இந்த ஏடிஎம் மில் மதியம் பணம் எடுக்க அப்பகுதி மக்கள் சென்றுள்ளனர். அப்போது ஏடிஎம் இயந்திரம் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்தனர்.அதிலிருந்த 4 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமிராவில் ஸ்ப்ரே அடித்து இயந்திரத்தில் துளையிட்டு கொள்ளை அடித்து இருப்பது தெரிய வந்துள்ளது.இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடிடையே பண்டி காவனூர் பகுதியில் கொள்ளை அடித்த மர்ம நபர்கள் திருநின்றவூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் ஐயும் உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details