தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு!

By

Published : Mar 27, 2023, 1:55 PM IST

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

WEATHER
இன்றும்

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(மார்ச்.27) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும்(மார்ச் 27), நாளையும் (மார்ச் 28) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட் பகுதியில் 7 சென்டி மீட்டரும் - கோத்தகிரி எஸ்டேட், கொடநாடு, தேன்கனிக்கோட்டை, குன்னூர் பிடிஓ ஆகிய பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக பல்லடம், பாலக்கோடு, அமராவதி அணை, பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம்.. கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

ABOUT THE AUTHOR

...view details