தமிழ்நாடு

tamil nadu

செல்போன் கடையில் கவுபார் கொள்ளையர்கள் கைவரிசை: சிசிடிவி காட்சி

By

Published : Apr 7, 2022, 3:31 PM IST

தாம்பரத்தில் உள்ள செல்போன் கடை ஒன்றின் பூட்டை உடைத்து இரண்டு பேர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

சென்னை:தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் வசந்குமார் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி இரவு வழக்கம்போல் கடையில் பணியை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அடுத்த நாள் (ஏப்ரல் 4) காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

செல்போன் கடையில் கவுபார் கொள்ளையர்கள் கைவரிசை

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 30 ஆயிரம் மதிப்புள்ள ப்ளூடூத், செல்போன் உதிரி பாகங்கள், விலையுயர்ந்த செல்போன்கள் திருடுபோய் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, வசந்குமார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது கடையின் பூட்டை கவுபார் மூலமாக உடைத்து ஒருவர் கடைக்குள் சென்று பொருள்களை திருடிக் கொண்டு மூட்டை கட்டி கொண்டு வெளிவந்து, மற்றொருவர் வெளியே இருசக்கர வாகனத்தில் காத்திருக்க இருவரும் தப்பிச் சென்றனர். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து, வசந்குமார் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை... பல் மருத்துவர் சரண்...

ABOUT THE AUTHOR

...view details