தமிழ்நாடு

tamil nadu

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்.. உயிர் தப்பிய குடும்பம்

By

Published : Nov 3, 2022, 12:56 PM IST

சென்னையில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்.

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்.. உயிர் தப்பிய குடும்பம்
நடுரோட்டில் பற்றி எரிந்த கார்.. உயிர் தப்பிய குடும்பம்

சென்னை: பள்ளிக்கரணையை சேர்ந்தவர், அருண்குமார் (34). இவர் தனது குடும்பத்தாருடன் காரில் தூத்துக்குடியில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்று விட்டு, இன்று (நவ 3) காலை சென்னை திரும்பியுள்ளார். இந்த நிலையில் தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் பள்ளிக்கரணைக்கு அருகில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது வேங்கைவாசல் சந்தோஷபுரம் சிக்னல் அருகே காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வரத் தொடங்கி உள்ளது. இதனால் காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு, காரில் இருந்த ஆறு பேரும் கீழே இறங்கி உள்ளனர். இதனையடுத்து கார் திடீரென தீப்பிடித்து முழுவதுமாக எரியத் தொடங்கியுள்ளது.

சென்னை தாம்பரத்தில் நடுரோட்டில் பற்றி எரிந்த கார்

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி காரில் பற்றிய தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. விபத்து குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பேருந்து மீது மோதிய கேஸ் டேங்கர் லாரி

ABOUT THE AUTHOR

...view details