தமிழ்நாடு

tamil nadu

Viral Video: கையில் கத்தியுடன் கானா பாடலுக்கு ரீல்ஸ் செய்யும் சிறுவர்கள்!

By

Published : Feb 7, 2023, 4:39 PM IST

தாம்பரம் அருகே கானா பாடலுக்கு கையில் பட்டாக்கத்தியுடன் மிரட்டும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட சிறுவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கையில் கத்தியுடன் கானா பாடலுக்கு ரீல்ஸ்
கையில் கத்தியுடன் கானா பாடலுக்கு ரீல்ஸ்

Viral Video: கையில் கத்தியுடன் கானா பாடலுக்கு ரீல்ஸ் செய்யும் சிறுவர்கள்!

சென்னை: தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் வசித்து வரும் 3 சிறுவர்கள் தங்களது கைகளில் பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு கானா பாடல்களுக்கு ஏற்ற படி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

இதனைப் பார்க்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது போன்று தொடர்ந்து சிறுவர்கள் தங்களை ரவுடிகளை போல பாவித்துக்கொண்டு கைகளில் பட்டாக்கத்தியுடன் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் கானா பாடலுக்கு ஏற்றார் போல வீடியோ வெளியிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.

மேலும், போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது இந்த மிரட்டல் வீடியோவை வெளியிட்ட சிறுவர்களை போலீசார் பிடித்து அவர்களை எச்சரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - இளைஞர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details