தமிழ்நாடு

tamil nadu

காதலிக்கு சரமாரி அடி உதை - காதலன் கைது

By

Published : Jan 16, 2022, 8:35 PM IST

செல்போனில் குறுஞ்செய்தியைக் கேட்டு, காதலியைத் தாக்கிய காதலனை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

நவீன் குமார்
நவீன் குமார்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சவேதா (20) என்பவர், சென்னை - பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இவரும் நவீன் குமார்(21) என்பவரும் கல்லூரியில் படித்தது முதல் நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். இதனிடையே நவீன் குமார், சவேதாவைப் பார்க்க பாடியில் உள்ள விடுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது அவர் திடீரென சவேதா செல்போனை வாங்கி, குறுஞ்செய்தி ஒன்றைப் பார்த்தவுடன், இது யாருடையது எனக் கேட்டு தகராறு செய்துள்ளார்.

மேலும் சவேதாவை அவதூறாகப் பேசி சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனால் மனமுடைந்த சவேதா, கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காவல் துறையினர் நவீன் குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - இரு காவலர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details