தமிழ்நாடு

tamil nadu

இயக்குனர் விக்ரமன் வீட்டில் பைக் திருட்டு.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

By

Published : May 6, 2023, 6:58 AM IST

பிரபல இயக்குநர் விக்ரமனின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் விக்ரமன் வீட்டில் பைக் திருட்டு.. சிசிடிவி காட்சிகள் சிக்கியது
இயக்குனர் விக்ரமன் வீட்டில் பைக் திருட்டு.. சிசிடிவி காட்சிகள் சிக்கியது

இயக்குநர் விக்ரமனின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள்

சென்னை: சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப்போல, உன்னை நினைத்து உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர், இயக்குனர் விக்ரமன். இவர் தனது குடும்பத்தோடு சென்னை அசோக் நகர் 53வது தெருவில் வசித்து வருகிறார். மேலும், இயக்குனர் விக்ரமனின் உறவினரான ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ருக்மணி என்பவர், அடிக்கடி விக்ரமன் வீட்டுக்கு தனது குடும்பத்தோடு வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 3ஆம் தேதி காலை 9.30 மணியளவில் ருக்மணி, விக்ரமன் வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர், சரியாக காலை 11 மணியளவில் ருக்மணி தனது வீட்டுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுப்பதற்கு வெளியே வந்து பார்த்துள்ளார். ஆனால், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது. இதனையடுத்து, வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதில், இரண்டு இளைஞர்கள் சட்டையால் முகத்தை மூடிக் கொண்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது தெரிய வந்துள்ளது. இது குறித்து ருக்மணி, குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் குமரன் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து இயக்குனர் விக்ரமன் கூறுகையில், “எங்களது குடியிருப்பு பகுதியில் இது போன்றதொரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை. எனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:61 போலி கடன் செயலிகளால் ஆபத்து.. கூகுளுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details